ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள்


ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகள்
x

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பில் குடிநீ்ர் திட்ட பணிகள் மேற்கொள்வதென பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் பேரூராட்சியில் ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பில் குடிநீ்ர் திட்ட பணிகள் மேற்கொள்வதென பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

பாபநாசம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூ.14 கோடியே 82 லட்சத்தில் குடிநீர் பணிகள்

பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்வது. 2022-23 ம் ஆண்டு மூலம் தன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தெருக்களில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வது.

பல்வேறு தெருக்களில் சிமெண்ட் சாலைகள், குடிநீர் குழாய்கள், தெரு மின்விளக்கு நீட்டிப்பு செய்வது. பாபநாசம் பேரூராட்சி 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, கல்வெட்டு அமைக்கும் பணி மேற்கொள்வது.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மயானசாலை அமைத்தல், ஈமைக் கிரியை மண்டபம் பழுது பார்த்தல் ஆகிய பணிகள் ரூ.68 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்வது.

மண் சாலைகளை சிமெண்டு சாலைகளாக மாற்றுதல். சிறிய குடிநீர் தொட்டி அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், வடிகால் கட்டுதல், ரெயில் நிலையத்திற்கு பாதை அமைத்தல், கழிவு நீர் வடிகால் அமைத்தல் ஆகிய அத்தியவாசிய பணிகளை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, பிரகாஷ், பாலகிருஷ்ணன், பிரேம்நாத் பைரன், சமீரா பர்வீன், கீர்த்தி வாசன், புஷ்பா, முத்து மேரி, தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story