குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர்


குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-கலெக்டர்
x

குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று 20 அம்ச திட்ட ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

குடிநீர், சாலை, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று 20 அம்ச திட்ட ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 20 அம்ச திட்டம் குறித்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-

மாவட்டத்தில் 20 அம்ச திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவா்களுக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு இதன் மூலம் மாதத்திற்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிதர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

அனைத்து துறைகளின் சார்பில் நடைபெற்று வருகின்ற குடிநீர் வசதிகள், கட்டுமான பணிகள், சாலை வசதிகள், மின்சார வசதிகள், மேம்பாலம் அமைக்கும் பணிகள், ஏரிதூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த நிதியாண்டில் தங்களின் துறைகளுக்கு வழங்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ரேணுகாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹரிஹரன், முத்தையன், ராமச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முரளிசதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story