வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் - மதுரை மாநகராட்சி

வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் - மதுரை மாநகராட்சி
x

மதுரை மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட வார்டு ஒன்றிற்கு ஏழு நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட வார்டு ஒன்றிற்கு ஏழு நாளுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் நகர் 37-வது வார்டில், கடந்த ஒரு ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்றும் இதுதொடர்பாக பல முறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சியிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், 37-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட திட்டமிட்டப்பட்டு, அதன்படி குடிநீர் வழங்கப்படுவதாகவும், சில சமயங்களில் குடிநீர் குழாய் கசிவு, மின்சார தடை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால், குடிநீர் வழங்க 7 நாட்களுக்கு மேல் ஆகவும் வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story