கார் டிரைவர் போக்சோவில் கைது
கார் டிரைவர் போக்சோவில் கைது
வீரபாண்டி
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முத்துச்செல்வன் (வயது 23). இவர் திருப்பூர்- மங்கலம் சாலை கருவம்பாளையம் அய்யங்கார் நகர் பகுதியில் தங்கி கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கருவம்பாளையம் பகுதியில் இருந்து மினி பஸ் மூலமாக தினமும் பயணம் செய்த முத்துச்செல்வன் பிளஸ்-2 மாணவியிடம் பழகி உள்ளார். இதனால் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவி கர்ப்பமானதால் கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து மருத்துவர்கள், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருவரையும் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்து முத்துச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.