பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
விழுப்புரம்
விழுப்புரம்
செஞ்சியை அடுத்த தாண்டவசமுத்திரத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய மாணவி ஆலம்பூண்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து வருகிறார். அவர் அங்குள்ள நிலத்திற்கு சென்றபோது டிராக்டர் டிரைவர் கணக்கன்குப்பத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் தமிழ்செல்வன்(வயது 20) என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அம்மாணவி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தமிழ்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story