மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு


மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு
x

வீட்டு மாடியில் செல்போன் பேசியபோது, மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 37). வேன் டிரைவர். இவர், கடந்த 3-ந்தேதி வீட்டின் மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு அருகே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் அவரது இடது கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து லோகநாதன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story