ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் டிரைவர் சாவு


ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் டிரைவர் சாவு
x

விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் டிரைவர் இறந்தார்.

விருதுநகர்


ெநல்லை மாவட்டம் கூட்டப்புளியை ேசர்ந்த மாணவிகள், தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் தனியார் பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். இந்த பஸ்சை நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நாராயணன் (வயது 56) ஓட்டி வந்தார். நேற்று இந்த பஸ் விருதுநகர்-சாத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது டிரைவர் நாராயணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. பஸ்சை சாலையோரத்தில் நிறுத்த முயற்சி செய்தார். அப்போது பஸ் பள்ளத்தில் இறங்கிநின்றது. பஸ்சில் தூங்கியபடி பயணம் செய்த மாணவிகள் பயத்தில் அலறினர். இந்தநிலையில் நெஞ்சுவலியால் உயிருக்கு போராடிய நாராயணன், சற்றுநேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பஸ்சில் பயணம் செய்த மாணவிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் டிரைவர் நாராயணன் பஸ்சை பாதுகாப்பாக சாலையோரத்தில் நிறுத்த முயற்சித்துவிட்டு, உயிரிழந்த சம்பவம் ெநகிழ்ச்சியைும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




Next Story