பெருந்துறை அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு


பெருந்துறை அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு
x

பெருந்துறை அருகே குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் டிரைவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் டிரைவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.

குடிப்பழக்கம்

பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள கிணிப்பாளையம் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்து வருபவர் சென்னியம்மாள் (வயது 50). இவருடைய கணவர் குருநாதன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுடைய மகன் கருப்பசாமி (19). அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மேலும் அடிக்கடி மது குடித்துவிட்டு் வீட்டு்க்கு வந்து தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சில நேரம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் கருப்பசாமி மனமுடைந்து காணப்பட்டு் வந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்...

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னியம்மாள் அதே ஊரில் உள்ள தனது மகள் தனலட்சுமி வீட்டுக்கு சென்றுவிட்டார். கருப்பசாமி வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

சென்னியம்மாள் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது கருப்பசாமி வீட்டில் இருந்த விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சென்னியம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story