லாரி மோதி ஒருவர் பலியான வழக்கில் டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை


லாரி மோதி ஒருவர் பலியான வழக்கில் டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை
x

லாரி மோதி ஒருவர் பலியான வழக்கில் டிரைவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி பாலக்கரை பீமநகரை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 52). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சி-சேலம் மெயின்ரோட்டில் வெள்ளூர்சத்திரம் பகுதியில் காரில் சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி அவரது காரில் மோதியது. இதில் சர்புதீன் படுகாயம் அடைந்து இறந்தார். மேலும் இதே விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் போலீஸ் ஏட்டு சுபாஷினியும் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவர் திண்டுக்கல் குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் கிராமம் சங்கம்பட்டி பகுதியை சேர்ந்த முத்துசாமியை(47) கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி முரளிதரகண்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.


Related Tags :
Next Story