மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு
களியக்காவிளை அருகே செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியது
களியக்காவிளை அருகே அடைக்காகுழி இறவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு வந்தார்.
பின்னர் இவர் வீட்டில் செல்போனை சார்ஜ் செய்தார். சார்ஜ் முழுவதும் ஏறியதும் சுரேஷ், அதிலிருந்து செல்போனைஎடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறினார்.
சாவு
இதனை பார்த்த அவருடைய மனைவி சாந்தி, சுரேஷை கட்டையால் தாக்கி அதிலிருந்து மீட்டார். எனினும் சுய நினைவின்றி கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக பாறசாலை பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.