லாரி மோதி டிரைவர் சாவு


லாரி மோதி டிரைவர் சாவு
x

லாரி மோதி டிரைவர் இறந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

லாரி மோதி டிரைவர் இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36), லாரி டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற லாரி திடீரென சதீஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story