ஆம்பூர் அருகே லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி


ஆம்பூர் அருகே லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 27 Aug 2022 7:05 PM GMT (Updated: 27 Aug 2022 7:29 PM GMT)

ஆம்பூர் அருகே லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே லாரி மீது மினி லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.


கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர்கள் இஷாத் (வயது 40), அஜீஸ் (46). இருவரும் டிரைவர்கள். நேற்று முன்தினம் இரவு மினிலாரியில் மீன் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை இஷாத் ஒட்டி வந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த வெங்காய லோடு லாரி மீது மினிலாரி மோதியது. இதில் மினி லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் இஷாத் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அஜீஸ் லேசான காயத்துடன் உயர்த்தப்பினார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அஜீசை மீட்டு ஆம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இஷாத்தின் உடலை மீட்டு பிரித்த பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story