கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர், போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர்
ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை கார் டிரைவரான பட்டுக்கோட்டையை அடுத்துள்ள கரம்பயம் வடக்கு தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் முத்துக்குமார் (வயது22) என்பவர் ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச்சென்றுள்ளார். மேலும் விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story