ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்து பள்ளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பனைமரத்துபள்ளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காருக்குள் இருந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. 30 மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் 1,400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கார் டிரைவரிடம், போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மாப்பிள்ளைகவுண்டன்புதூரை சேர்ந்த சையத் இப்ராகிம் (வயது 23) என்பதும், கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காருடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.