பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர் கைது


பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 May 2023 12:45 AM IST (Updated: 12 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் எலெக்ட்ரிசீயன் வேலை பார்க்கும் நபர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி தனது வீட்டின் குளியல் அறையில் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது மேல் வீட்டில் வசிக்கும் டிரைவரான ஜெயபால் (வயது 47) என்பவர் கீழே இறங்கி வந்தார். அப்போது அந்த பெண் குளிப்பதை அவர் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்த அந்த பெண் சத்தம் போட்டதை தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அவரை பிடித்த விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தது உறுதியானது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story