புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி


புதுச்சத்திரம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றது. அப்போது கர்நாடகாவில் இருந்து திருச்சிக்கு எத்தனால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவரான மும்பையை சேர்ந்த லட்சுமண் யாதவ் (வயது 42) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story