சேலம் சரகத்தில், கடந்த 6 மாதத்தில்விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்துஅதிகாரிகள் தகவல்


சேலம் சரகத்தில், கடந்த 6 மாதத்தில்விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்துஅதிகாரிகள் தகவல்
x
சேலம்

சேலம்

சேலம் சரகத்தில் கடந்த 6 மாதத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிமுறைகள்

சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை நிகழ்த்துதல், அதி வேகமாக வாகன ஓட்டுதல், செல்போன் பேசிய படி மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டுதல் உள்ளிட்டவைகளுக்காக ஓட்டுனரின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது. சேலம் சரகத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் கடந்த 6 மாதத்தில் சாலை விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை நிகழ்த்திய 196 பேர், அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 245 பேர், அளவுக்கு அதிமாக சரக்குகளை ஏற்றி சென்ற 19 பேர், அதிக ஆட்களை ஏற்றி சென்ற 125 பேர், செல்போன் பேசியப்படி சென்ற 359 பேர், மது குடித்து வாகன ஓட்டிய 42 பேர், சிக்னலில் சிவப்பு விளக்கை தாண்டி நிறுத்திய 297 பேர் என மொத்தம் 1,283 பேரின் ஓட்டுனர் உரிமம் 6 மாதம் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றனர்.


Next Story