டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

ஆயக்குடி அருகே டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் பழனியை அடுத்த வாகரையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையம் சார்பில் ஆயக்குடி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியில், மக்காளச்சோள பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

இதற்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சத்தியசீலா, ராதாஜெயலட்சுமி, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி முகாமில் ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில், மக்காச்சோள சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், பூச்சி, நோய் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் படைப்புழு தாக்குதலை தடுக்க மேக்சிம் பயிர் பூஸ்டர் என்ற மருந்து தெளிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அப்போது டிரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.


Next Story