குற்றங்களை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக்கும் திட்டம்


குற்றங்களை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக்கும் திட்டம்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை நகரில் குற்றங்களை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக் கும் திட்டம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

கோயம்புத்தூர்

கோவை நகரில் குற்றங்களை தடுக்க டிரோன் மூலம் கண்காணிக் கும் திட்டம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

டிரோன் மூலம் கண்காணிப்பு

கோவை நகரில் சட்டம்-ஒழுங்கு, வன்முறை ஏற்படும் போது டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து போலீஸ் கமிஷனர் தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

இந்த நிலையில் டிரோனை பறக்க விட்டு குற்றத்தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

இதில் நவீன டிரோனை செயல்படுத்தும் விதம் குறித்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஆதர்ஷ், ஹரீஷ் ஆகியோர் விளக்கி கூறினர். இதில் துணை கமிஷனர்கள் சுபாஷினி, சண்முகம், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துல்லியமான பதிவு

இது குறித்து டிரோன் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

உயரமான கட்டிடங்களில் இருந்து 200 மீட்டர் உயரத்துக்கு மேல் டிரோனை பறக்க விட்டு, சம்பவங்களை துல்லியமாக பதிவு செய்ய முடியும்.

அதோடு எளிதாக கண்காணிக்கும் நிலை ஏற்ப டும். குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தப்பிச் சென் றால் உயரமான இடத்தில் இருந்து வாகன பதிவு எண் வரை துல்லியமாக பதிவு செய்து கண்டுபிடிக்க முடியும்.

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் நபர்களையும் அடை யாளம் காணமுடியும். அவினாசி ரோடு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் பகுதி ஆகும்.

எனவே முக்கிய பிரமுகர்கள் வரும் போது உயரமான இடத்தில் போலீசாரை நிறுத்தி கண்காணிப்ப தற்கு பதிலாக டிரோனை பறக்கவிட்டு கண்காணிக்க முடியும்.

இதற்காக கோவை நகர போலீசுடன் ஒப்பந்தம் செய்து திட்டங் களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story