சென்னையில் மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை


சென்னையில் மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
x

சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை நடைபெற உள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் காந்திவ் -5 என்ற பாதுகாப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

இதனால் சென்னை பெரு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்டபட்ட பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளை முதல் 17 ம் தேதி வரை சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story