ஜவுளி கடை ஊழியர் தண்ணீரில் மூழ்கி சாவு
ஜவுளி கடை ஊழியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
சிவகங்கை
திருப்புவனம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 34). இவர் மதுரை அண்ணா நகர் பகுதியில் ஜவுளிக்கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று திருப்புவனம் அடுத்த மணலூர் அருகே வைகை ஆற்றில் குமரன் பிணமாக கிடந்தார். இதற்கிடையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் இவரை காணவில்லை என வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் தகவல் பரவி உள்ளது. இது குறித்து அறிந்த திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், குமரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அதில், குமரன் வைகை ஆற்றில் தவறி விழுந்து, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story