போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம்

அபிஷேக கட்டளை அரசு பள்ளியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளம்கிள்ளிவளவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போதையினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
Related Tags :
Next Story






