போதைப்பொருள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
போதைப்பொருள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கணியனூர் கிராமத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு கலை பயணம் என்ற பெயரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கலால் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கலெக்டர்கள் மாநாடு வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நடைபெறும். கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின, கலெக்டர்கள் மாநாடு நடத்தி, அதில் போதைப் பொருட்கள் சம்பந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கணியனூர் கிராமத்தில் கலை நிகழ்ச்சி மூலமாக போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளையும், இதனால் குடும்பத்தில் உள்ள சிக்கல்களையும் கலை நிகழ்ச்சி மூலமாக விளக்கப்படுவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூங்கொடி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், கலவை தாசில்தார் சமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் மற்றும் கலை நிகழ்ச்சி குழுவினர் கலந்து கொண்டனர்.