பிதிர்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்


பிதிர்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிதிர்காடு அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீரா தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் போதையின் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும், போதையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் போதைப்பொருளால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story