போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர்

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அருப்புக்கோட்டை அம்மன் கோவில் தெரு பகுதியில் கஞ்சா போன்ற போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையேற்று பொது மக்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது பொதுமக்கள் கஞ்சா விற்பனையை தடுக்கவும், குடியிருப்பு பகுதியில் அருகில் உள்ள மதுபான கடைகளை வேறு இடத்துக்கு மாற்றவும் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார்.

எமன் வேடம் அணிந்த நபர் மூலம் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தி போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஜோபியா பாய், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story