போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி


போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஆஸ்மத்து பாத்திமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை உரையாற்றினார். சுயநினைவு இயக்குனர் சபினுல்லாஹ்கான் வாழ்த்துரை வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்பு கழக இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல பிரிவு துறை தலைவர் பெரியார் லெனின் கலந்துகொண்டு போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். இதையொட்டி மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றினர். முடிவில் ஆங்கில துறை உதவி பேராசிரியை ஷர்மிளா பர்வீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கணிதத்துறை உதவி பேராசிரியை பாத்திமா கனி ஒருங்கிணைத்தார். இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story