போதை பொருட்கள் ஒழிப்பு முகாம்


போதை பொருட்கள் ஒழிப்பு முகாம்
x

கோத்தகிரியில் போதை பொருட்கள் ஒழிப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி காவல்துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கோத்தகிரியில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் கலந்துகொண்டு, சமூக வலைதளங்களை மாணவ-மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், கல்வியில் பின் தங்குவது, நினைவுத் திறன் பாதிப்பு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே, போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story