போதை ஊசி செலுத்தி கொண்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
போச்சம்பள்ளி அருகே போதை ஊசி செலுத்தி கொண்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்தூர்
போச்சம்பள்ளி அருகே போதை ஊசி செலுத்தி கொண்ட 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலி நிவாரணி மாத்திரை
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்தவர்கள் அசீம் (வயது 20), உபேத், (20), சுபாஷ் (25). நண்பர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் உபேத்துக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் பீரோ ஏற்றி கொண்டு காவேரிப்பட்டணத்திற்கு சென்றனர். அங்கு உறவினர் வீட்டில் பீரோவை இறக்கி விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பினர். ேபாச்சம்பள்ளி அருகே நெடுங்கல் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின் அருகில் போதைக்காக 10 வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் 3 பேரும் ஒருவருக்கொருவர் போட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் சரக்கு வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டனர்.
தீவிர சிகிச்சை
கரடியூர் அருகே வந்தபோது அசீம், உபேத் ஆகிய 2 பேரும் திடீெரன மயங்கி தண்ணீர் கேட்டுள்ளனர். இதனால் சரக்கு வேனை நிறுத்தி அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் 3 பேரும் தண்ணீர் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அசீம், உபேத், சுபாஷ் ஆகிய 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக ஊசி செலுத்தி கொண்ட 3 வாலிபர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.