போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x

ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆற்காடு தாலுகா போலீசார் இணைந்து நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றார். ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கி பேசினார். அப்போது மாணவ -மாணவிகளுக்கு போதை பொருட்கள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்காக ஒவ்வொரு கல்லூரி சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு மாதம் ஒருமுறை கலந்தாய்வு நடத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் யாரும் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் போதைப் பொருட்கள் உட்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். முகாமில் ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் ஜோயல், ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்- இன்ஸ்பெக்டர்கள் கோபி, அசோக் குமார், உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story