போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 May 2023 9:15 AM IST (Updated: 5 May 2023 9:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே உள்ள பாதிரிமூலாவில் சேரம்பாடி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, போதை பொருட்களை பயன்படுத்துவதால் சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே யாராவது இந்த பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால், பயன்படுத்தினால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். முகாமில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார், மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அய்யன்கொல்லி பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.


Next Story