போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

விழுப்புரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அதன் விளைவுகள் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குடும்ப நல நீதிபதி தேன்மொழி கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் செய்யப்படும் உதவிகள் மற்றும் எவ்வாறு சட்டங்களை எளிதாக பெறுவது என்பதை பற்றியும், போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வரும் மாணவ- மாணவிகளின் மனநிலை, அவர்களின் குடும்ப நிலை பற்றியும் எடுத்துக்கூறினார். அவரை தொடர்ந்து, மருத்துவ துறையின் சார்பில் மனநலப்பிரிவு டாக்டர் புனிதவதி, கல்லூரி மாணவர்கள் எவ்வாறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறார்கள், அதன் மூலம் என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பதை பற்றி தெளிவாக எடுத்துக்கூறினார். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ கலந்து கொண்டு, போதைப்பொருட்களால் மாணவ- மாணவிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டு காவல்துறையால் தண்டிக்கப்படுகிறார்கள், இதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகளை பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறினார்.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் பூங்கொடி, இளநிலை நிர்வாக உதவியாளர் ராஜ்குமார் மற்றும் அரசு கலைக்கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பொறுப்பு செயலாளரும் முதன்மை சார்பு நீதிபதியுமான விஜயகுமார் நன்றி கூறினார்.


Next Story