போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு ராம சோமசுந்தரம் வழிகாட்டுதலின்படி, பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மதியழகன் தலைமை தாங்கினார். உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் பயன்படுத்துவது மற்றும் சட்டவிரோதமாக வாங்குதல், விற்றல் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வமான தண்டனைகள் குறித்தும், போதை பொருட்களால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் அடங்கிய போதை பொருள் தடுப்புக் குழு அமைக்கப்பட்டது.


Next Story