பஸ் மோதி, மருந்து விற்பனை பிரதிநிதி படுகாயம்


பஸ் மோதி, மருந்து விற்பனை பிரதிநிதி படுகாயம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பஸ் மோதி, மருந்து விற்பனை பிரதிநிதி படுகாயம் அடைந்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நெல்லை-தென்காசி சாலையில் மகிழ்வண்ணநாதபுரத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். சாலடியூர் விலக்கு அருகே வந்தபோது, தென்காசியில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ஒன் டூ ஒன் அரசு பஸ் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது, இதில் ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார், அரசு பஸ் டிரைவர் தென்காசியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story