பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கடத்தி வந்த போதை பொருட்கள் சிக்கியது - 6 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்


பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கடத்தி வந்த போதை பொருட்கள் சிக்கியது - 6 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கடத்தி வந்த போதை பொருட்கள் சிக்கியது. இதில் 6 பேர் கைது செய்யப்பபட்டனர் . 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன

மதுரை

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கட்டபுளிநகர் அருகே திண்டுக்கல்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த டிராவல்ஸ் பஸ்சை சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் 7 அட்டைப்பெட்டிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பஸ்சின் கிளீனர் ஆந்திராவைச் சேர்ந்த நாராயணன்(வயது 29), டிரைவர்கள் வெங்கட்ராமி ரெட்டி (49) ராஜசேகர்(37) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து அந்த அட்டைப் பெட்டிகளை சந்துரு(49) என்பவர் ஏற்றி விட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த பஸ்சின் அருகில் இருந்த 2 கார்களை சோதனை செய்தபோது அந்த கார்களிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் அட்டைப்பெட்டிகள் ஏற்றி வைத்து இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து காரில் இருந்த செல்லூரைச் சேர்ந்த அருண்குமார்(26), கோசாகுளத்தை சேர்ந்த டேவிட் தினகரன்(40), ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(34) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் போதை பாக்குகளை வாங்க வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணன் உள்பட 6 பேரை கைது செய்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 700 மதிப்புள்ள போதை பொருட்களையும், அதை கடத்த பயன்படுத்திய பஸ் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story