முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு


முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு
x

புதுக்கோட்டையில் வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.150-க்கு விற்பனையாகிறது.

புதுக்கோட்டை

முருங்கைக்காய் விலை உயர்வு

சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முருங்கைக்காயும் ஒன்றாகும். சைவ சாப்பாட்டில் சாம்பார், வத்தக்குழம்பில் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுவது உண்டு. இதேபோல் முருங்கைக்காய் கூட்டும் இடம்பெறும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டையில் முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் இதன் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.

உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது.

சின்ன வெங்காயம்

இதேபோல் சின்னவெங்காயம் விலை உயரத்தொடங்கி உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியதால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் வரத்து மார்க்கெட்டிற்கு குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.50 முதல் 60-க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- கத்திரிக்காய் ரூ.45, தக்காளி ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், சுரைக்காய் ரூ.25-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும், கொத்தவரங்காய் ரூ.30-க்கும், பச்சை மிளகாய் ரூ.60-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், கேரட் ரூ.80-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும் விற்பனையானது. சில்லறை கடைகளிலும், வெளி மார்க்கெட்டில் இவற்றின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்டன.


Next Story