குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது


குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது
x

பொள்ளாச்சியில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீஸ்காரர் மீது தாக்குதல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 31). இவர், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியில் ராஜபாண்டிக்கு ஜோதிநகரில் மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டதாகவும், அவரது மகன் பாபு என்பவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பாபுவின் உறவினரான கட்டிட தொழிலாளி மாசாணி (41), போலீஸ்காரரை தகாத வார்த்தைகளில் பேசி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென போலீஸ்காரர் ராஜபாண்டியை தாக்கினார்.

தொழிலாளி கைது

இதில், போலீஸ்காரருக்கு தலை, முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், விசாரணை நடத்தி, மாசாணியை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாசாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story