குடி போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு


குடி போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு
x

குடி போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை

கலவை

குடி போதையில் கிணற்றில் குதித்த தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருந்ததி பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் நந்தகுமார் (வயது 28). புதிய வீடுகளுக்கு கம்பிகட்டும் தொழிலாளி. இவர் நேற்று மாலை கலவை புத்தூர் சாலை அருகே மதுகுடித்து விட்டு, கிணற்றில் குதித்துள்ளார். இதை பார்த்ததும் அருகில் இருந்த இரண்டு பேர் நந்தக்குமாரை காப்பாற்ற கிணற்றில் குதித்து தேடியுள்ளனர். அவர்களால் முடியவில்லை.

அதைத்தொடர்ந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கலவை இன்ஸ்பெக்டர் காண்டியப்பன், தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் சென்று கிணற்றில் இறங்கி நந்தகுமாரை தேடி பிணமாக மீட்டனர்.

நந்தகுமாருக்கு நித்தியா என்ற மனைவியும், இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் காண்டியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் காந்தி ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story