2-வது மனைவியுடன் மதுபோதையில் தகராறு: தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை


2-வது மனைவியுடன் மதுபோதையில் தகராறு: தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

2-வது மனைவியுடன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோட்டூர்

2-வது மனைவியுடன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு மாதத்திற்கு முன் திருமணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் குடும்ப தகராறு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் கரூரை சேர்ந்த கோமதி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் இடையே அடிக்க தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கோமதி தனது பெற்றோர் வீட்டிற்கு போகலாம் என்று கணவர் பிரபாகரனிடம் கூறி உள்ளார். அப்போது பிரபாகரன் மது போதையில் இருந்து உள்ளார். இதனால் கோமதி மதுகுடித்து விட்டு வந்தால் எப்படி போவது என்று கூறியதால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

தற்கொலை

இதையடுத்து கோபித்துக் கொண்டு கோமதி வெளியே சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் தட்டி பார்த்தும் திறக்கவில்லை. இதை தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபாகரன் காணப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story