தஞ்சை மாநகராட்சியில் 14 இடங்களில் உலர்கழிவு சேகரிப்பு மையங்கள்


தஞ்சை மாநகராட்சியில் 14 இடங்களில் உலர்கழிவு சேகரிப்பு மையங்கள்
x

தஞ்சை மாநகராட்சியில் 14 இடங்களில் உலர்கழிவு சேகரிப்பு மையங்கள்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகரில் 14 இடங்களில் உலர் கழிவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கை என் நகரம்

தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலிருந்தும் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுகிறது. வீடுகளில் உள்ள தேவையற்ற பொருள்களை முழுமையாகப் பெறுவதற்காகத் தூய்மை இந்தியா திட்டம் 2.0 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் என் வாழ்க்கை என் நகரம் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நமது இல்லங்களில் உபயோகப்படுத்த முடியாத பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை மாநகராட்சி வசம் ஒப்படைக்கலாம். அதாவது, உபயோகப்படுத்த முடியாத புத்தகங்கள், காகிதங்கள், உபயோகமற்ற காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பொருட்கள், பேட்டரிகள், பழுதாகியுள்ள மின் சாதன பொருட்களை ஒப்படைக்கலாம்.

உலர் கழிவு சேகரிப்பு மையங்கள்

அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் மணி வரை மாநகராட்சிக்கட்பட்ட கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் ஒப்படைத்து, தங்கள் இல்லங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக 14 இடங்களில் உலர் கழிவு சேகரிப்பு மையங்கள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி மாநகரை சுத்தப்படுத்த ஒரு முன்னோடி திட்டமாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story