ரூ.1 கோடி மதிப்பில் இருவழிச்சாலை பணி தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ரூ.1 கோடி மதிப்பில் இருவழிச்சாலை பணியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது காஞ்சிரங்குளம் கிராமம். பிரதான சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை குறுகலாக இருந்தது. கிராமப்புறங்களில் சாலை வசதியை மேம்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் இரு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த பணியினை நேற்று மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்து பொக்லைன் எந்திரத்தையும் இயக்கினார். நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், நகர் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராமு, சுப்பையா மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், மகேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், கிராம நிர்வாகிகள் மலை ராஜன், விஜயகுமார், கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.