வால்பாைறயில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது- பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


வால்பாைறயில் தொடர் மழை காரணமாக  சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது-  பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x

வால்பாைறயில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது. மேலும் பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாைறயில் தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 118 அடியை தாண்டியது. மேலும் பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

சோலையாறு அணை

வால்பாறை பகுதியில் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளாக விளங்கும் சோலையாறு அணை, கீழ்நீரார் அணை, மேல்நீரார் அணை ஆகிய அணைகள் உள்ளது. இதில் கீழ் நீரார் அணை மற்றும் சோலையாறு அணைகளில் மட்டும் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இதில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்யக்கூடிய மழைத் தண்ணீர் முழுவதும் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியை வந்தடைந்து சோலையாறு அணைக்கு செல்கிறது. அக்காமலை புல்மேடு, அதனை சுற்றியுள்ள வனப் பகுதி, சின்னக்கல்லார், நீரார் ஆகிய பகுதியில் பெய்யக்கூடிய மழைநீர் முழுவதும் மேல்நீரார் மற்றும் கீழ் நீரார் அணைகளை வந்தடைந்து அங்கிருந்து சுரங்க கால்வாய்கள் மூலம் சோலையாறு அணையை சென்றடைகிறது.

பிர்லா நீர்வீழ்ச்சி

தற்போது வால்பாறை பகுதியில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் அவ்வப்போது கனமழையும் பெய்கிறது. தொடர் மழை காரணமாக பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியது.

தற்போது வால்பாறை பகுதியில் இரவு, பகலாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருப்பதாலும், சோலையாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,532 கன அடியை தாண்டியது.

மின் உற்பத்தி தொடக்கம்

சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் மின்உற்பத்தி தொடங்கியது. சோலையாறு மின்-1 இயக்கப்பட்டு 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்த பின்னர் 382.13 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.அதேபோல் சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு 429.66 கன அடித் தண்ணீர் தமிழக -கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

வால்பாறையில் 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மேல்நீரார்- 49, வால்பாறை-31 ,கீழ் நீரார்- 28, சோலையாறு அணை- 19.


Next Story