கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை மும்முரம்


கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை மும்முரம்
x

கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கரூர்

வெயில் அதிகரிப்பு

கரூரில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

தர்பூசணி பழங்கள் கரூரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கரூரில் சுங்ககேட், சர்ச் கார்னர் திருமாநிலையூர், ஜவகர்பஜார், தாந்தோணிமலை உள்பட பல்வேறு இடங்களில் தர்பூசணி குவித்து வைக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தர்பூசணி விற்பனை மும்முரம் மேலும் நகரின் பல இடங்களில் சரக்கு வேன்கள் மூலமாகவும் தர்பூசணியின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

விற்பனை மும்முரம்

இந்த தர்பூசணி பழங்கள் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி பழம் தட்டு ஒன்று ரூ.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெயிலின் தாகத்தை தணிக்க குறைந்த விலையில் கிடைக்கும் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.


Next Story