குடிநீர் வசதி இல்லாததால்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்


குடிநீர் வசதி இல்லாததால்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே குடிநீர் வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

குடிநீர் வசதி

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி ஸ்ரீராம் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் மற்றும் சத்துணவு தயார் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டது.

இந்த மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின் மோட்டாரை பழுது நீக்க எடுத்து சென்றனர். ஆனால் தற்போது வரை மின்மோட்டார் பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

பெற்றோர் போராட்டம்

இதற்கிடையே மின்ேமாட்டார் பழுது நீக்கப்படாமல் பள்ளியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததை கண்டித்தும், ஒரு மாதமாக தங்களின் குழந்தைகள் தண்ணீர் சுமந்து வருவதை கண்டித்தும் நேற்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்தால் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று பெற்ேறார் கூறினர். இதையடுத்து பேசிய தங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதில் சமாதானம் அடைந்த மாணவர்களின் பெற்ேறார் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story