உரிய ஆவணம் இல்லாததால்வடமாநில வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல்


உரிய ஆவணம் இல்லாததால்வடமாநில வியாபாரியிடம் இருந்து  ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல்
x

உரிய ஆவணம் இல்லாததால் வடமாநில வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலை கண்காணிப்பு குழுவினர், ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் இருந்தது. இதைத்தொடர்ந்து நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கருங்கல்பாளையம் கே.எஸ். நகர் பகுதியை சேர்ந்த அணில் லகோதி (வயது 36) என்பதும், அவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கடை வைத்து நடத்தி வருவதும், அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

பின்னர் நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அணில் லக்கோதிடம் அறிவுறுத்தினார்.


Related Tags :
Next Story