உரிய ஆவணம் இல்லாததால்மில் உரிமையாளரிடம் ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல்
ரூ.88 ஆயிரத்து 500 பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதையப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பறக்கும் படை ொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, 4 நிலை கண்காணிஅதிகாரி முருகேசன் தலைமையில் அதிகாரிகள் வில்லரசம்பட்டி நால் ரோடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.88 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு வில்லரசம்பட்டி போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 51) என்பதும், இவர் ஈரோடு ராசாபாளையம் பகுதியில் மில் வைத்து நடத்தி வருவதும், மில்லில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக அந்த பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. எனினும் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவருடைய உத்தரவுப்படி மாவட்ட கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.