வெள்ளிமலை வனப்பகுதியில் மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது


வெள்ளிமலை வனப்பகுதியில் மழை இல்லாததால்  மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது
x

வெள்ளிமலை வனப்பகுதியில் மழை இல்லாததால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

தேனி

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இன்னும் சில நாட்களில் மூல வைகை ஆறு முழுமையாக வறண்டு விடும் நிலையில் உள்ளது. ஆனால் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.


Next Story