வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு


வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
x

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் பெரிய அளவிலான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஜவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் டன் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரத்திற்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர். வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.

1 More update

Next Story