வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்வு


வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்வு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்ந்துள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வரத்து குறைவால் அயிரை மீன் விலை உயர்ந்துள்ளது.

விற்பனை அமோகம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளுக்கு மீன்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகின்றன. இந்த மீன்களை பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வந்து வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகமாக இருக்கும்.

மீன் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதும். வரத்து குறைவால் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் குளங்களில் நீர் வற்றி உள்ளதாலும், வரத்து குறைவாலும் அயிரை மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

அதாவது ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.200 அதிகரித்து ரூ.2,200-க்கு விற்பனை ஆனது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயிரை மீன் விலை ரூ.1300 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. அதேபோல விரால் மீன் ஒரு கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. அயிரை மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story