ஐ.எப்.எஸ்.நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால்தற்கொலை செய்த என்ஜினீயர் உடலுடன் உறவினர்கள் மறியல் செய்ய முயற்சி


ஐ.எப்.எஸ்.நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால்தற்கொலை செய்த என்ஜினீயர் உடலுடன் உறவினர்கள் மறியல் செய்ய முயற்சி
x

ஐ.எப்.எஸ்.நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்த என்ஜினீயர் உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்

குடியாத்தம்

ஐ.எப்.எஸ்.நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்த என்ஜினீயர் உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ஜினீயர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காந்திநகர் கல்லேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39). என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பிரசாத், ஏஜென்டு மூலம் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்திருந்தார்.

அந்த நிறுவனம் பொதுமக்கள் பலரிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்த நிலையில் உரிமையாளர்கள் நிர்வாகிகள் தலைமறைவாகினர்.

சம்பாதித்த பணத்தையும், சிலரிடம் கடன் வாங்கி செலுத்தியிருந்த ரூ.26 லட்சத்தையும் இழந்து ஏமாற்றப்பட்ட பிரசாத் நேற்று முன்தினம் அந்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

மறியலுக்கு முயற்சி

இந்த நிலையில் நேற்று மதியம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் பிரசாத்தின் உடல் கல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது காந்தி நகர் அருகே ஆம்புலன்ஸ் வந்த போது பிரசாத்தின் உறவினர்கள் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்ற வேண்டும் எனவும், ஏமாற்றப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, உள்ளிட்டோர் பிரசாத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அப்போது அந்த நிதி நிறுவனத்தின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்யும் முயற்சியை உறவினர்கள் கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story