சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்


சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடியில், சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

போடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 200 பேர் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். அதில் 146 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.386 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல் போடி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை மற்றும் போடி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பளம் வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளைக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.

1 More update

Related Tags :
Next Story